/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல்
X

பைல் படம்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.63 லட்சத்து 77 ஆயிரத்து 597ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.57 லட்சத்து 22 ஆயிரத்து 840ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.19 லட்சத்து 39 ஆயிரத்து 980ம், பவானி தொகுதியில் ரூ.16 லட்சத்து 37 ஆயிரத்து 100ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம், கோபி தொகுதியில் ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 650ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.54 லட்சத்து 5 ஆயிரத்து 858ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 545 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.1 கோடியே 38 லட்சத்து 42 ஆயிரத்து 95 சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.94 லட்சத்து 84 ஆயிரத்து 450 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 28 March 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை