பவானி அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.33 லட்சம் திருட்டு!

பவானி அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.33 லட்சம் திருட்டு!
X
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.33 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1.33 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் பகுதியில் உள்ள எரங்காட்டு தோட்டத்தை சேர்ந்த கருப்பணன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு அடகு வைக்கப்பட்ட நகையை மீட்பதற்காக ஸ்கூட்டரில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 800-யை வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் காத்திருக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறினர். இதனால் அவர் டீ குடிப்பதற்காக சித்தார் பேருந்து நிறுத்தத்தில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடை முன்பு ஸ்கூட்டரில் சாவியுடன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணத்தை காணவில்லை.

யாரோ மர்மநபர்கள் ஸ்கூட்டரில் பணம் வைத்திருப்பதை தெரிந்து கொண்டு அவரை பின்தொடர்ந்து சென்று ஸ்கூட்டரில் இருந்த சாவியை எடுத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பணன் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story
ai tools for education