ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சாலைகள் சேதம்

ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சாலைகள் சேதம்
X

மேடும் பள்ளமாக காணப்படும் சாலை.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி.

ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் சாரல் மழை பெய்து கொண்டு வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. பவானிசாகர் அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஈரோடு பல்வேறு மாவட்டத்தில் பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னிமலை ,அம்மாபேட்டை, ஈரோடு, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் அவதி , பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.



மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தோடு அருகே நான்கு வழிச் சாலைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. பெய்து வரும் மழையால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இங்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் போக்லைன் இயந்திரம் மூலம் சாலை சரி செய்யப்பட்டது இன்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!