கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூரில் விவசாயிகள் சாலை மறியல்

கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூரில் விவசாயிகள் சாலை மறியல்
X

கோபி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

கோபி அருகே உள்ள புதுக்கரைப்பதூர் பகுதியில் கொள்முதல் நிலைய அதிகாரிகளை கண்டித்து கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி மற்றும் அரக்கண்கோட்டை பாசன பகுதியில் தற்போது தீவிர நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலங்களில் அறுவடை செய்த நெல்லினை விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்கையில் அங்குள்ள அதிகாரிகள் குத்தகை நிலங்களில் விளைந்த நெல்லினை விற்பனை செய்ய நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்த பத்திரம் வாங்கி வரவேண்டுமென கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் வசிப்பதாலும் அவர்களை அணுக முடியாத சூழ்நிலையில் வாய்மொழி உத்திரவாத்ததின் அடிப்படையில் குத்தகைக்கு நிலங்களை பெற்று விவசாயம் செய்து வருவதால் கொள்முதல் மைய அதிகாரிகள் கேட்கும் சான்றுகளை கொடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.


இதன் காரணமாக அரசு அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகளை தளர்த்தி பழைய முறையில் நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டுமென்றங்கோரிக்கையுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுக்கரைபுதூர் நெல் கொள்முதல் மையத்தின் அருகாமையில் உள்ள கோபி அந்தியூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் மறியல் காரணமாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் பேருந்துள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் வரிசையில் நின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளின் குறைகளின் மீது உரிய துறை அதிகாரிகள் மூலம் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!