டி.என்.பாளையம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
பைல் படம்
சத்தியமங்கலம் அங்கனகவுண்டன் புதூர் அருகேயுள்ள செங்கோட்டையன் நகரை சேர்ந்தவர் பசுவய்யா (65) கூலி வேலை, இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக சைக்கிளில் டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்ப சத்தியமங்கலம் சாலை நோக்கி இயேசு ஆலயம் அருகே பசுவய்யா வந்துள்ளார்.
அப்போது திடீரென சாலையை சைக்கிளில் கடக்க முயன்றுள்ளார் பசுவய்யா, அப்போது பின்னால் கார்த்தி (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத மோதியதில் பசுவய்யா கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் அடிப்பட்டு இரத்த காயத்துடன் இருந்த பசுவய்யாவை அருகில் இருந்தோர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர், அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பசுவய்யா உயிரிழந்தார்.
பசுவய்யாவின் உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர், இச்சம்பவம் குறித்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கார்த்தி என்பவர் பங்களாப்புதூர் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu