அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட பசு.

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கோட்டைமலையான் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவர், பசுக்களை வளர்த்து வருகிறார். இன்று காலை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது, பசு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தேடியபோது, தோட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து, பசு தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 20அடி ஆழ கிணற்றில், கயிறு கட்டி இறங்கி, பசுவை பத்திரமாக மீட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!