பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு மீட்பு

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு மீட்பு
X

கிணற்றில் விழுந்த எருமையை மிட்ட்க்கும் தீயணைப்பு படையினர்.

பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த எருமை மாட்டினை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

பெருந்துறை அடுத்த சீனாபுரம், சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் திருமுருகன், விவசாயி. இவர், தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்றில், மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்ட எருமை மாடு ஒன்று தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த எருமை மாட்டினை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!