அந்தியூர் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்த எருமை மாடு மீட்பு

அந்தியூர் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்த எருமை மாடு மீட்பு
X

அந்தியூர் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்த எருமை மாடு மீட்பு.

அந்தியூர் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்த எருமை மாட்டினை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல் இருக்கும். இந்நிலையில், இன்று காலை அந்த வடிகாலில் எருமை, நிறைமாதம் கர்ப்பம் தரித்த எருமை மாடு சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.

இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் பாதுகாப்பான முறையில் கட்டி மேலே பொதுமக்கள் உதவியோடு மீட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story