கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மீண்டும் திறப்பு

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மீண்டும் திறப்பு
X

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது 10 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அணையில் இருந்து 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் குறைந்த செலவில் விடுமுறை நாட்களை குடும்பத்துடன் கழிக்க முடியும் என்பதால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமன்றி திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவார்கள். தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்

கடந்த 17-ம் தேதி முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணை நிரம்பி தடுப்பணை வழியாக கடந்த 17ம் தேதி 1,700 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 5,000 கன அடி தண்ணீர் வெளியேறியது. மேலும், அணையின் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி வெள்ள நீர் வெளியேறியது. இதனால், கொடிவேரி தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அணையில் குளிப்பதற்கும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் குளிப்பதற்கும் தடை விதித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியாக தடை விதித்தனர். தீபாவளி பண்டிகை தினத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்தனர். கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் கொடிவேரி அணை மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு பிறகு நேற்று (புதன்கிழமை) முதல் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. இதனால்‌, கொடிவேரி அணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் அங்குள்ள மீன் வறுவல் விற்பனை செய்யும் கடைகளும் வெறிச்சோடியது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil