கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க நடவடிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க நடவடிக்கை
X

புதிய தார்ச்சாலை அமைக்கும் பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துச்சாமி.

திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சென்னையில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு பல்வேறு இடங்களிலும் தேங்கியிருக்கும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் போர்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றார். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் முத்துசாமி, 2 ஆண்டுகளில் இதற்கான தீர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அவர், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், அரசுடன் இணைந்து செயல்பட்டால் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்