பெருந்துறையில் மின்வாரிய அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றம்

பெருந்துறையில் மின்வாரிய அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றம்
X

பைல் படம்.

பெருந்துறை வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வந்த மின்வாரிய அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகம் செயற்பொறியாளார்/இ&பே/பெருந்துறை மற்றும் உதவி கணக்கு அலுவலர்/வருவாய் பிரிவு/பெருந்துறை அலுவலகங்கள் 85/25,85/26, ஈரோடு ரோடு, வெங்கமேடு, பெருந்துறையில் செயல்பட்டு வந்தது. தற்போது மின்வாரிய கட்டிடமானது, நாளை முதல் ''செயற்பொறியாளர் அலுவலகம், இயக்குதலும் மற்றும் பேணுதலும், (கீழ் தளம்) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். 33/11 KV SS வளாகம் /சேனிடோரியம் (அஞ்சல்), துடுப்பதி ரோடு, பெருந்துறை - 638053. என்ற முகவரியிலும், உதவி கணக்கு அலுவலர் அலுவலகம்,வருவாய் பிரிவு,(முதல் தளம்)33/11 KV SS வளாகம்/சேனிடோரியம் (அஞ்சல்), துடுப்பதி ரோடு, பெருந்துறை 638053. என்ற முகவரியிலும் செயல்பட உள்ளதாக, ஈரோடு மின்பகிர்மான வட்ட பெருந்துறை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!