அந்தியூரில் ரேக்ளா பந்தயம்: வீரர், போலீசார் காயம்

அந்தியூரில் ரேக்ளா பந்தயம்: வீரர், போலீசார் காயம்
X

பைல் படம்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி 44-வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தியூரில் குதிரை ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது.

அந்தியூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. போட்டியினை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ , தமிழ்நாடு கேபிள் டிவி வாரிய தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

போட்டியின்போது, கிருஷ்ணாபுரம் அருகே ஒரு ரேக்ளா பந்தய வண்டியில் சென்ற, மதுரையை சேர்ந்த சாதிக் தவறி விழுந்தார். லேசான காயத்துடன் தப்பினார். இதேபோல், கிருஷ்ணாபுரம் ஐயப்பன் கோவில் அருகில், மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் தாறுமாறாக சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற , பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீசார் கீழே விழுந்து காயமடைந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!