அந்தியூர் பேரூராட்சியில் பாமக வேட்பாளர் உட்பட 3 பேர் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அந்தியூர் பேரூராட்சியில் பாமக வேட்பாளர் உட்பட 3 பேர் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
X

பைல் படம்

அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இதில், 2 பேர் சாதி சான்றிதழ் ஒப்பக்கடைக்காத காரணத்தாலும், 11வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த பாமக வேட்பாளரின் மனுவில் முன்மொழிபவர் பெயரில் தவறு இருந்ததாலும் இதனை சுட்டிக்காட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மொத்தம் 3 பேரின் மனுக்கள் நிராகரித்தார். தற்போது அந்தியூர் பேரூராட்சியில் 70 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture