அந்தியூரில் வட்டார வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்

அந்தியூரில் வட்டார வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம்
X

எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில், அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில், அந்தியூர் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் அந்தியூர் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் வகுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல், அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் மற்றும் அந்தியூர் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!