அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு: 545 மனுக்கள் குவிந்தன

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு: 545 மனுக்கள் குவிந்தன
X

இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நாளில் மொத்தம் 545 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நடைபெற்றது.அந்தியூர் தாலுகாவில் அம்மாபேட்டை , அந்தியூர் , பர்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.இந்த நிலையில் கடைசி நாளான இன்று, அத்தாணி உள்வட்ட பகுதியான அத்தாணி , கீழ்வாணி , நகலூர் , பிரம்மதேசம் , குப்பாண்டம்பாளையம் முதலான கிராமத்தினர் 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தனர்.

பட்டா மாறுதல், வாரிசு சான்று, முதியோர் ஓய்வூதியம், விவசாயிசான்று அடங்கல் சான்று என 33 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மொத்தம், நான்கு நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் 545 மனுக்கள் பெறப்பட்டன.அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மாவட்ட மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்