பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது

பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட அருண்குமார்.

பவானி அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பவானி காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் பவானியில் தனியார் உணவகத்தில் தங்கி வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 20) என்ற இளைஞர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்தது தெரியவந்தது.

மேலும், வாலிபர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாலிபரை பவானி காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் அருண்குமாரை கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture