அந்தியூரில் ராமானுஜர் 1,005 வது நவ கருட சேவை உற்சவம்
கருட வாகனத்தில் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
ராமானுஜரின், 1,005 வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், நவ கருட சேவை நடந்தது.
இதில் 11 கருட சேவைகளாக, அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், திருப்பதி பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பெருமாள், பேட்டைபெருமாள், சீனிவாச பெருமாள், ஜி.எஸ்.காலனி வரதராஜ பெருமாள், மைலம்பாடி சுதர்சன மடம் சீனிவாச பெருமாள், புரசைக்காட்டூர் கரியப்பெருமாள், பெருமுகைப்புதூர் சஞ்சீவராய பெருமாள் , பள்ளிபாளையம் கோதண்டராமர், பிளிகிரி நாயக்கன்பாளையம் சமேத மலையப்ப சுவாமி ஆகிய சுவாமிகள் கருட வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டன.அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், சத்திரோடு வழியாக பர்கூர்ரோடு வழியாக கோட்டை அழகுராஜா பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது.
அந்தியூர், தவிட்டுப்பாளையம், மைலம்பாடி, புரசைக்காட்டூர், அத்தாணி பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu