ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில், அவசர உதவி எண் அறிவிப்பு.

ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி காற்று, மழையால் மின் கம்பம் சாய்தல், மின் கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற காரணங்களுக்காக மின்வாரியத்தை 'மின்னகம்' எனப்படும் 94987 94987, வாட்ஸ்அப் எண்ணில் படத்துடன் 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க