ஈரோட்டில் மிதமான மழை; 10 மில்லி மீட்டர் மழை பதிவு!

ஈரோட்டில் மிதமான மழை; 10 மில்லி மீட்டர் மழை பதிவு!
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (நேற்று) மாலையில் மிதமான மழை பெய்ததில் 10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

ஈரோடு மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (நேற்று) 10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரங்களில் ஓரிரு நாள்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வந்தது. இதனால் பெரிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மக்களும் விவசாயிகளும் நம்பினர். இருப்பினும், கால நிலை மாற்றம் காரணமாக போதுமான மழையின்றி கடும் வெயில் அடித்து வந்தது.

கடந்த 5 நாள்களுக்கு முன் ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் நீடித்தது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். தெருவோர வியாபாரிகள், கட்டிடம் கட்டும் தொழில் செய்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் நேற்று புதன்கிழமை (முன்தினம்) நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்திருந்தது.

இதையடுத்து, வியாழக்கிழமை (நேற்று) காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் தணிந்து இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் வானம் மேகம் சூழ்ந்து இருட்டத் தொடங்கியது. சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால், 10 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. இந்த மழைக் காரணமாக நகரில் இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலவியது.

மழையால் மக்கள் சற்று மனம் குளிர்ந்தாலும் பகல் வேளைகளில் வெயில் கொளுத்தி எடுப்பது நிற்கவில்லை. இது அக்டோபர் மாதம்தானா இல்லை மே மாதத்தில்தான் இன்னும் இருக்கிறோமா என அவர்கள் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பேசி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business