பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
X

ஆப்பக்கூடலில் நேற்று இரவு மழை பெய்த போது எடுத்த படம்

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பவானி, அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதியம் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து,லேசான மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

Tags

Next Story
ai in future agriculture