பூசாரியூர் செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றப்பட்டு பூச்சாட்டு விழா தொடங்கியது. 25ஆம் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 28-ந் தேதி சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து செம்முனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை சுமார் 11 மணிஅளவில் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாதசாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக வனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் அங்குள்ளசாமி கண் சிலைகளுக்கு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கார ஆராதனைபூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வனக் கோவிலிருந்து பூசாரி மற்றும் பக்தர்கள் புடைசூழ குட்டி பாறை எனும் இடத்திற்கு சென்று பூசாரி ஆட்டுக்கிடாய்க்கு பூஜை செய்து தீர்த்தம் தெளிப்பார். ஆடு துளுக்கிய பின் முறைதாரர்களால் முதல் கிடாய் வெட்டப்படும். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனுக்காக கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் ஒவ்வொன்றாக வெட்டி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு செம்முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் நாளை செம்முனீஸ்வரர் வனக் கோவிலில் இருந்து மடப்பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து செல்வர். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu