சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நல தாசில்தாரிடம் ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் மனு
ஆதி தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கொங்கு யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் ஆதி திராவிடர் நல தாசில்தாரிடம் மனு அளித்த போது எடுத்த படம்.
கோபி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆதிதிராவிடர் நல தாசில்தாரிடம் ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவிற்கு உட்பட்ட நஞ்சை கோபி கிராமம் எல்லமடை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 80 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கபட்டது.
இதே பகுதியில் பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளார். இது பற்றி பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எந்த வித நடவடிக்கை இல்லை.
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு சமுதாய கூடமோ, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதி தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கொங்கு யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் ஆதி திராவிடர் நல தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
உடன் துணை பொது செயலாளர் வீரக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாசு, உட்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu