ஒலகடம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஒலகடம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் முறையாக குடிநீர் வழங்க காேரி பாெதுமக்கள் சாலை மறியல்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பவானி - அந்தியூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பவானி டிஎஸ்பி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால்,பவானி அந்தியூர் செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா