அந்தியூர் காலனியில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Drinking Water Supply - ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அந்தியூர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மேற்பகுதி சேதமடைந்ததது. இதனால், வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அந்தியூர் - மலைக்கருப்புசாமி கோவில் சாலையில் கையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலகர் சரவணன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் , சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் சின்னதம்பிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிதவசியப்பன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu