சீரான குடிநீர் வினியோகம்: பவானிசாகர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் வினியோகம்: பவானிசாகர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
X
பவானிசாகர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம் கிராமத்தில், சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, இன்று புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!