பவானி: ஜம்பை சின்னியம்பாளையத்தில் மயானத்துக்கு நிலம் ஒதுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பவானி: ஜம்பை சின்னியம்பாளையத்தில் மயானத்துக்கு நிலம் ஒதுக்க பொதுமக்கள் எதிர்ப்பு
X
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை சின்னியம்பாளையத்தில் மயானத்துக்கு நிலம் ஒதுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பவானி அடுத்த ஜம்பை பேரூராட்சி, சின்னியம்பாளையத்தில் மயானத்திற்கு நிலம் ஒதுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பவானி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பை, சின்னியம்பாளையத்தில் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி வரும் பொது மயானம் உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துவ அமைப்பு சார்பில் மயானம் ஒதுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் தெரிவிக்குமாறு வருவாய் துறை சார்பில் ஜம்பை பேரூராட்சி தலைவருக்கு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஜம்பை பேரூராட்சி தலைவர் என்.ஆனந்த் குமார் தலைமையில் பொதுமக்கள் பொது மயானத்தில் கிறிஸ்தவர்களுக்கு மயானம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

அதில், சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 750 குடும்பத்தினர் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இந்நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு தனியே மயான மதிப்பினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே, மயானத்தை புதிதாக யாருக்கும் ஒதுக்க கூடாது என மனுவில் தெரிவித்திருந்தனர். இதில் ஜம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story