அந்தியூரில் திமுக கழக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அந்தியூரில் திமுக கழக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X
திமுக ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
அந்தியூரில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், ஒன்றிய திமுக சார்பில் கழக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழகச் செயலாளரும், அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த ஓராண்டு காலத்தில் மக்களுக்கு நிறைவேற்றிய நலத்திட்டங்களை குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர். பொது கூட்டத்தில் திமுகவின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!