சென்னம்பட்டியில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியில் தமிழக முதல்வர் உத்திரவுப்படி கல் குவாரி அமைப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியில் அரசின் நான்கு கல்குவாரிகள் உள்ளன. தற்போது அந்த நான்கு கல் குவாரிகளும் ஏலம் விடப்பட உள்ளது. இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரி இயங்குவதற்கான பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் இதில் பங்கேற்ற பொதுமக்கள் கல்குவாரி இயங்குவதன் மூலம் தங்களுக்கு ஆண்டுதோறும் வேலை கிடைப்பதாகவும், ஒட்டுநர்களைப் பொறுத்தவரையில் கல்குவாரி இயங்கினால் மட்டும்தான் வெளிமாநிலங்களுக்கு செல்லாமல் உள்ளூரிலேயே பணி இருக்கும். எனவே கல்குவாரி தொடர்ந்து இயங்கினால் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவும், எனவே கல்குவாரி இயங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் உதயகுமார், வட்ட ஆட்சியர் விஜயகுமார், காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,கனிம வளத்துறை உதவி இயக்குநர் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் நிகழ்வுகளின் வீடியோ பதிவு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் அனுப்பபட்டு, ஒப்புதல் வந்த பின்பு குவாரி செயல்பட உரிமம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கருத்தை கேட்கும் கூட்டத்தை நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu