ஆடிப்பெருக்கு: பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட தடை

ஆடிப்பெருக்கு: பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட தடை
X

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதி.

ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட 5வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட 5வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஆடி 18ம் தேதி ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து அணையை கண்டு களிப்பர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆடி 18 ஆம் தேதி பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 92 அடியாக உள்ளது. இதனால், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (ஆக.3) சனிக்கிழமை அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே அணை மேல் பகுதியில் உள்ள நீர்தேக்கப் பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதேசமயம், பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர்.

ஏற்கனவே, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 முதல் 2022 வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டும் அணை பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு தற்போது, 5வது ஆண்டாக இந்த தடை அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!