ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.14) பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.14) பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
X

பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (டிச.13) சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (டிச.13) சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

இந்த குறைதீர்க்கும் முகாமை கண்காணிக்க அந்தந்த வட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு வட்டத்தில் வில்லரசம்பட்டி - சாணார் பாளையம், பெருந்துறை வட்டத்தில் புங்கம்பாடி, மொடக்குறிச்சி வட்டத்தில் பூந்துறைசேமூர், கொடுமுடி வட்டத்தில் இச்சிபாளையம் ஆகிய பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் நடக்கிறது.

அதேபோல், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அண்ணாநகர் - பெருமுகை-2, நம்பியூர் வட்டத்தில் பொலவபாளையம், பவானி வட்டத்தில் பொம்மன்பட்டி, கவுந்தப்பாடி, அந்தியூர் வட்டத்தில் வெள்ளித்திருப்பூர், சத்தியமங்கலம் வட்டத்தில் கொமாரபாளையம், தாளவாடி வட்டத்தில் பெஜலெட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடையில் நடக்கிறது.

எனவே, சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story