அந்தியூரில் அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு, இன்றும் நாளையும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அந்தியூர் வட்டார தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூர் ஒன்றிய தலைவர் தமிழரசி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே, அங்கன்வாடி ஊழியர்கள் ஈஎஸ்ஐ வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் செயலாளர் ஞானசுந்தரி கற்பகம் லோகநாயகி தேவி அருணா வரலட்சுமி பூங்கொடி கஸ்தூரி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் அந்தியூர் வட்டாரத்தில் உள்ள 137 உதவியாளர்கள் 128 பணியாளர்கள் என மொத்தம் 255 பேர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu