அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.3.68 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
![அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.3.68 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.3.68 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை](https://www.nativenews.in/h-upload/2022/04/18/1518578-img20220105131244.webp)
பைல் படம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 5,222 தேங்காய்கள், குறைந்த விலையாக 6 ரூபாய் 07 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 77 பைசாவிற்கும், 17 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 67 ரூபாய் 89 பைசாவிற்கும் விற்பனையானது.
மேலும், 38 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 76 ரூபாய் 59 பைசா முதல் 87 ரூபாய் 79 பைசா வரையிலும், 14 மூட்டைகள் எள் கிலோ 112 ரூபாய் 59 பைசாவிற்கும், 54 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 59 பைசாவிற்கும் விற்பனையானது.இன்றைய வர்த்தகத்தில், மொத்தம் 98.44 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் மூன்று லட்சத்து 68 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu