சத்தியமங்கலத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சத்தியமங்கலத்தில் நாளை  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (புதன்கிழமை) இண்டஸ்ட்ரி கனெக்ட் 2022 என்ற தலைப்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமுக்கு கல்லூரியின் நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்குகிறார்.

இந்திய அளவில் பிரபலமான மென்பொருள், வங்கித்துறை, ஆன்லைன் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் என 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தேவை யான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலை அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படித்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கல்லூரியின் நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இதில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்பு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் நகல் எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்