ஈரோட்டில் வரும் 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமிற்க்கான பதிவும், தொடர்ந்து நேர்காணலும் நடைபெறுகிறது.

இம்முகாமில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் உட்பட பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.முகாமில் பங்கேற்போர், தங்களது கல்வித்தகுதிக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, சுய விவரக்குறிப்பு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை எடுத்து வரவேண்டும்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடுவோர் பங்கேற்றுப் பயன் பெறலாம். மேலும், இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டு துறையில் வேலை தனியார் வாய்ப்புப் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0424 2275860 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!