ஈரோட்டில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பட்டதாரி இளைஞர்கள்-இளம்பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட மேம்பாட்டுத் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். திருமகன் ஈவெரா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

முகாமில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள், பெண்கள் தங்களது பெயர், இளம் முகவரி, கல்வித்தகுதி குறித்து அங்கு பதிவு செய்து கொண்டனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைக்கான நேர்முககாணல் நடைபெற்றது. பின்னர் தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture