ஈரோட்டில் வரும் 21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 21-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் வரும் 21-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து (21.01.2023) அன்று ஈரோடு மாவட்டம், நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க் கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000க் கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் 102 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்றவர்கள் பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலைவாய்;ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும். இவ்வேலைவாய்ப்பு முகாம் வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. தனியார்துறையில் என பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது என்றும் ஈரோடு கலெக்டர் ஹெச்.கிருஷ்ணணுண்ணி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424- 2275860, மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings