ஈரோட்டில் 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

தனியார் வேலைவாய்ப்பு முகாம் (பைல் படம்).

Private Employment Camp ஈரோட்டில் வரும் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

Private Employment Camp

ஈரோட்டில் வரும் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி இம்மாதம் 15ம் தேதியன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!