ஈரோடு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
X
அறச்சலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்கொண்டார் காயமடைந்தனர்.

பழனியில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி இன்று தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அறச்சலூர் அருகே உள்ள கண்ணம்மாபுரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க தினேஷ் பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது மழையின் காரணமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுனர் தினேஷ் உட்பட பயணிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த அறச்சலூர் பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story