அந்தியூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து -ஒருவர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து -ஒருவர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான தனியார் ஆம்புலன்ஸை படத்தில் காணலாம்.

அந்தியூர் அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மனைவி திவ்யபாரதிக்கு, கடந்த 12ம் தேதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை மூச்சு திணறல் காரணமாக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

ஆம்புலன்ஸ் அந்தியூர்-பவானி சாலையில் பருவாச்சி அண்ணாநகர் அருகே சென்று கொண்டிருந்த போது, மழையின் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட விவேகானந்தனின் பெரியம்மாள் அய்யம்மாள் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஆம்புலன்சில் பயணித்த ஓட்டுநர் மாபுபாஷா, விவேகானந்தன் , தனியார் மருத்துவமனை செவிலியர் ஜோதிமணி ஆகியோர் காயமடைந்த நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்சில் பயணித்த விவேகானந்தனின் பாட்டி மல்லிகா மற்றும் குழந்தை எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project