கோபிசெட்டிபாளையம் அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் கோட்டுப்புள்ளாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி மகன் பிரகாஷ். இவருக்கும் நஞ்சைகோபி அருகே உள்ள குளவிகரடு பகுதியை சேர்ந்த கௌசல்யா (வயது 22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, முகுந் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கௌசல்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், கௌசல்யாவை கவனித்துக் கொள்ள தாயார் சகுந்தலா தேவி உடனிருந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று பிரகாஷ் தோட்டத்தில் வேலை செய்து, கொண்டிருந்த போது, கௌசல்யா குழந்தையை தூங்க வைக்கப் பயன்படுத்தும் தொட்டில் கொக்கியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கௌசல்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர். மேலும், இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil