ஈரோட்டில் நாளை (12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் நாளை (12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்
X

நாளை பவர் கட் (பைல் படம்).

ஈரோட்டில் நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோட்டில் நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி மின்வாரியம் சார்பில் நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின்விநியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே, மின்சார தேவை ஏதேனும் இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பிரதான சாலை, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன்நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யாநகர், முதலிதோட்டம், மல்லிநகர், ஈ.பி.பி.நகர், கந்தையன் தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல்நகர், பொன்னிநகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம்நகர், ரோஜாநகர், அருள்வேலன்நகர் மற்றும் எல்.வி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!