பவானி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

பவானி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
X

தங்கவேல்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒரிச்சேரிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 49). இவர் தனது மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தங்கவேலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கவேலு அவரது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்து, சென்னையில் ஆண் குழந்தையை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தத்து எடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழந்தை காணாமல் போன வழக்கில், சம்பந்தப்பட்டதாக கூறி சென்னை போலீசார் தங்கவேலுவின் மனைவி சபிதாவை கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தங்கவேலு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story