பராமரிப்பு பணி காரணமாக பெருந்துறை பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக பெருந்துறை பகுதிகளில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X
காந்திநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பெருந்துறை தொகுதிக்குட்பட்ட காந்தி நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதனால் காஞ்சிக்கோயில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஒலப்பாளையம், கந்தம்பாளையம்பிரிவு. சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம். காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியப்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஒசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம். சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோயில்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!