மொடக்குறிச்சி பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின் நிறுத்தம்

மொடக்குறிச்சி பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின் நிறுத்தம்
X

பைல் படம்.

நடுப்பாளையம், கணபதிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலயம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், ஈஞ்சம்பள்ளி, பி.கே.மங்களம், கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே. பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் கணபதிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் முத்துகவுண்டன்பாளையம், ராக்கியாபாளையம், மடத்துபாளையம், கணபதிபாளையம், பச்சாம் பாளையம், பழனிகவுண்டன் பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சாணார்பாளையம், குமரன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!