தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் (9ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் (9ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சிறைமீட்டான்பாளையம், வளையக்காரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் தளவாய்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வைரமங்கலம், சிறைமீட்டான்பாளையம், குண்டுசெட்டிபாளையம், கோட்டையம் பாளையம், சூளைமேடு, கவுண்டம்புதூர், குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வருகிற 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
how to bring ai in agriculture