பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர். கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!