ஈரோடு மாவட்டத்தில் ஜூலை 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஜூலை 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையம் மற்றும் பி.பெ.அக்ரஹாரம் ஆகிய மின்பாதையில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து ஆனந்தம்பாளையம் செல்லும் மின்பாதையிலும், ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து பி.பி.அக்ரஹாரம் செல்லும் மின்பாதையிலும் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் - ஆனந்தம்பாளையம் செல்லும் மின்பாதை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அய்யகவுண்டன்பாளையம், கரியாக்கவுண்டன்வலசு, வெப்பிலி, ஆனந்தம்பாளையம், பொய்யேரி, தானத்துப்பாளையம், பொன்னம்பாளையம், தெற்கு பொன்னம்பாளையம், கூத்தம்பாளையம்.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் - பி.பெ.அக்ரஹாரம் செல்லும் மின்பாதை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதிநகர், மல்லிநகர், அன்னை சத்யாநகர், கந்தையன் தோட்டம், வி.ஜி.பி.கார்டன், 16அடி ரோடு, அருள்வேலன்நகர், காட்டுதோட்டம், சூளை, அம்மன் கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!