பவானியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |17 Jun 2022 1:30 PM IST
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் பவானி நகர் முழுவதும், மூன்றோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர், செங்காடு, குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணாடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu