ஈரோட்டில் நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு

ஈரோட்டில் நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை ஒத்திவைப்பு
X
ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச்.19) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மற்றும் காசிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (19ம் தேதி) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை சில நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!