பவானி சுற்றுவட்டார பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தம்

பவானி சுற்றுவட்டார பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தம்
X
தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் (டிசம்பர் 6-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் தளவாய்பேட்டை, ஜம்பை, பெரியவடமலைபாளையம், புன்னம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம், திப்பிசெட்டிபாளையம், மணக்காடு, ஒரிச்சேரி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி, புதுப்பாளையம், நல்லிபாளையம், ஐடியல் நகர், ஆதர்ஸ் நகர், பெரியார் நகர், அண்ணா நகர், பெரியபுலியூர், சின்னபுலியூர், வைரமங்கலம், எலவமலை, ராமலிங்கநகர், பழையூர், சென்னநாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை கோபி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்